Monday, May 21, 2012

dust



Its just like from an alien movie be very careful when u get caught with dust...as following pics will show effects of bad dust to a person...

While he was walking he felt an eye irritation, thinking that it was just regualr dust, he started to rub his eye, in an effort to remove the dust.... then his eyes got really red, and he went and bought some eye drops from a pharmacy.... few days passed n his eyes were still red and seems a little swollen.

Again he dismissed it as the constant rubbing and that it will go away. The days go by the swelling of his eye got worse, redder and bigger.... till he decided to go and see a doctor for a check up.

The doctor immediately wanted an operation, being afraid of a tumor growth or cyst. At the operation, what was thought to be a growth or cyst, actually turned out to be a live worm..... what was thought initially to be just mere dust actually was an insect's egg......because of that, my friends, if u do get caught in dust, and the pain persists, pls go see a doctor immediately...... 

Monday, May 14, 2012

ஹார்ட்டுக்கும் தர்பூசணி

வெயிலுக்கு மட்டுமல்ல.. ஹார்ட்டுக்கும் தர்பூசணி ஜில்ஜில்
 
தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் எல்லாரது உச்சி மண்டையும் சுர்ரென்கிறது. இளநீர், நுங்கு போன்றவை அதிகம் விற்பனையாகின்றன. பளிச்சென்ற பச்சை & சிவப்பு கெட்டப்பில் தர்பூசணியும் தெருவுக்கு தெரு குவிந்து கவர்ந்திழுக்கிறது. மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. சி வைட்டமினும் அதிகம் இருக்கிறது.
இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கால்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். உயர் ரத்த அழுத்தம் உள்ள சிலர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரு குரூப்பாக பிரிக்கப்பட்டனர். ஒரு குரூப்பினர் தினமும் ஒரு மாத்திரை சாப்பிட்டனர். 2 வது குரூப்புக்கு டம்மி மாத்திரை கொடுக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. ‘தர்பூசணி மாத்திரை’ சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது.
‘மாரடைப்பு, ஸ்டிரோக் ஏற்பட மிக முக்கிய காரணம் அதிக ரத்த அழுத்தம்தான். தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது. இதனால், உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே, இதயம் நீண்ட காலம் மக்கர் செய்யாமல் இயங்கும்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Monday, May 7, 2012

கூல் வாட்டர் வேண்டாமே!

 தண்ணீர் நிறைய குடிங்க!

கோடைக்காலத்தில் உடலில் இருக்கும் நீரானது வியர்வை, சிறுநீர் ஆகிய பல்வேறு வகையில் விரைவில் வெளியேறுகிறது. அதனால், உடலில் இருக்க வேண்டிய நீரை சமப்படுத்த அதிக தாகம் ஏற்படுகிறது. 

குளிர்காலத்தில் நமது தசைகள் சுருங்கிவிடுவதால் தாகம் எடுப்பது குறைகிறது. கோடைகாலத்தில் இது எதிர் மாறாக செயல்பட்டு உடனே நீரைக் குடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 

நாம் கோடைக்காலங்களில் எவ்வளவு நீரைக் குடித்தாலும் நல்லதுதான். தேவையற்ற நீரை உடலே வெளியேற்றிவிடும்.

வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் வந்த உடனே தண்ணீரைக் குடிக்காமல் நமது உடல் வீட்டின் உள் வெப்ப நிலைக்கு சமநிலை அடைந்ததும் நீரைக் குடிக்க வேண்டும். அப்போதுதான் வேறு ஏதும் பிரச்னைகள் ஏற்படாது. அதிக நீர் குடியுங்கள்... சிறுநீரகத்தின் வேலையை எளிதாக்குங்கள்.

தண்ணீரை கொதிக்க வைத்து பின்பு குளிர வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. 


*இப்போதெல்லாம் கிராமத்திலும்,ந கர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட து. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின்எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது . காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.
*இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்`சாப்பிட ்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.
*இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள்.
*இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறா ர்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
*சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.
*உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி கூல் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க தானே?

Monday, April 30, 2012

ஆண் மலடு


இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!


இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Monday, April 23, 2012

கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு



`கொழுப்பு' என்றாலே பயப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி- `கொழுப்புச் செல்களில் உள்ள ஒரு மரபணு, சர்க்கரை நோயில் இருந்து காக்கிறது' என்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், பொதுவான கருத்துக்கு மாறாக, உடம்புக் கொழுப்பானது நன்மையே செய்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடம்பின் திறனை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்கள் கூறும் chREBP மரபணு, குளூக்கோஸ் சர்க்கரையை `பேட்டி ஆசிட்களாக' மாற்றுவதன் மூலமும், இன்சுலினுக்கான நுண்ணுணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் `டைப் 2' சர்க்கரை நோயை எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வயதில் உடல் பருமன் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பொதுவாக `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
``எல்லா கொழுப்பும் தீமையானது என்ற பொதுவான கருத்து உண்மையல்ல. உடல் பருமன் என்பது மோசமான உடலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதுதான் ஒருவருக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், குண்டான பலருக்கு உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன'' என்று ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் மார்க் ஹெர்மான் கூறுகிறார்.
உடல் பருமனானவர்களைப் பொறுத்தவரை, சர்க்கரையானது கொழுப்பு செல்களில் நுழைவது தடுக்கப்படுவதால் அதன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் ஆய்வகத்தில், குண்டான எலி ஒன்றில் குளூக்கோஸை கடத்தும் ஜீன் அளவை அதிகரித்தபோது, அதன் மூலம் மேலும் அதிக சர்க்கரை கொழுப்புச் செல்களில் அனுமதிக்கப்படுவதும், அதன்மூலம் சர்க்கரை நோயிலிருந்து எலி காக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. குளூக்கோஸை கடத்தும் ஜீன்கள் இல்லாத சாதாரண எடையுள்ள எலிகளில் நாளடைவில் சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று உற்சாகமடைந்துள்ள ஆய்வாளர்கள், மேலும் இதுதொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Friday, April 20, 2012


இந்திய மருத்துவம்:



மேற்குலகம் உலகின் முதல் மருத்துவராக ஹிப்போக்கிரட்டஸைக் (460 - 377 BC) குறிப்பிடுகிறது. ஆனால் இவருக்கு முன்பே மகரிஷி சாரகா (500 BC) எழுதிய சாரகா சம்ஹிதா அல்லது எளிய தமிழில் மருத்துவக் கையேடு புகழ்பெற்றது. நூலில் பல்வேறு வியாதிகளுக்கான தீர்வுகள் காணப்பட்டது. மருத்துவ முறைகள், முதலுதவிகள் குறித்த தெளிவான கையேடு. நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மருத்துவர் சாரகா ரோம, அரபு நாடுகளில் மிகவும் மதிக்கப்பட்டார்.

அடுத்தது ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம்! கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்பே சுஷ்ருதர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! சிதைந்த மூக்கு, உதடு,காதுகள் இவற்றைத் தனது அறுவைசிகிச்சைத் திறனால் சரிசெய்திருக்கிறார். அறுவை சிகிச்சையை 8 வகைகளாகப் பிரிக்கிறார். 125 வகையான மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.

Saturday, February 25, 2012

CHOLESTEROL



 What is high cholesterol?

Cholesterol is a type of fat. Your body needs it for many things, such as making new cells. But too much cholesterol in your blood increases your chances of having a heart attack and stroke.


You get cholesterol from the foods you eat and from your liver. Your liver makes most of the cholesterol your body needs.

o        Desirable cholesterol is less than 200 milligrams per deciliter (mg/dL).
o        Borderline-high cholesterol is 200 to 239.
o        High cholesterol is 240 or higher.

1.1          What are the different kinds of cholesterol?


Cholesterol travels through your blood attached to a protein. This cholesterol- protein package is called a lipoprotein. Lipoproteins are either high-density or low-density, based on how much protein and fat they have.

Low-density lipoproteins (LDL) are mostly fat with only a small amount of protein. LDL is the bad kind of cholesterol because it can clog your arteries. If you have high cholesterol, your doctor will want you to lower your LDL.

LDL levels:
·         Best LDL is less than 100 mg/dL.
·         Near best LDL is 100 to 129.
·         Borderline-high LDL is 130 to 159.
·         High LDL is 160 to 189.
·         Very high LDL is 190 and above.

High-density lipoproteins (HDL) help clear the bad cholesterol from your blood and keep it from clogging your arteries. HDL is the good kind of cholesterol. High levels of HDL (60 or above) can protect you from a heart attack.

HDL levels:
·         Desirable or high HDL is 60 mg/dL or above.
·         Undesirable or low HDL is less than 40.
Triglycerides are another type of fat in your blood. If you have high triglycerides and high LDL, your chances of having a heart attack are higher.

Triglyceride levels:
·         Borderline high is 150 to 199 mg/dL.
·         High is 200 or above.
·         Very high is 500 or higher.

1.2          What causes high cholesterol?


High cholesterol may run in your family. The foods you eat also may cause high cholesterol.  Causes include:
·                     Your diet. Eating too much saturated fat and cholesterol can cause high cholesterol. Saturated fat and cholesterol come from animal foods such as beef, pork, veal, milk, eggs, butter, and cheese. Many packaged foods contain saturated fat such as coconut oil, palm oil, or cocoa butter. You will also find saturated fat in stick margarine and vegetable shortening. Cookies, crackers, chips, and other snacks usually contain partially hydrogenated vegetable oil or trans fat, which can raise cholesterol.
·                     Your weight. Being overweight may raise triglycerides and lower HDL.
·                     Your activity level. Not exercising may raise LDL and lower HDL.
·                     Your overall health. Having diseases such as low thyroid can raise cholesterol. Cigarette smoking may lower HDL.
·                     Your age. After you reach age 20, your cholesterol starts to rise. In men, cholesterol levels usually level off after age 50. In women, cholesterol levels stay fairly low until menopause. After that, they rise to about the same level as in men.
·                     Your family. A disease called a lipid disorder can also cause high cholesterol. This rare problem is inherited from family members, and it changes how your body handles cholesterol. If you have a lipid disorder, your cholesterol may be well over 250 mg/dL. It may be harder to treat.

1.3          What are the symptoms?


High cholesterol doesn't make you feel sick. But if cholesterol builds up in your arteries, it can block blood flow to your heart or brain and cause a heart attack or stroke.

In some people, cholesterol deposits called xanthomas may form under the skin. They look like small bumps.

1.4          How is high cholesterol diagnosed?


Your doctor will use a blood test to check your cholesterol.
·                     A lipoprotein analysis is the most complete test. It measures your total cholesterol: HDL, LDL, and triglycerides. You cannot have food for 12 hours before this test.
·                     A simple cholesterol test can measure your total cholesterol and HDL. You can eat before this test. Sometimes doctors do this test first and then order a lipoprotein analysis if you have high cholesterol or low HDL.

  

1.5          How is it treated?


You and your doctor may decide first to treat your high cholesterol without medicine. Changes to your lifestyle and diet may be all you need. These changes include eating foods low in saturated fat, being more active, losing weight if you need to, and quitting smoking if needed.

If you cannot lower your cholesterol enough after trying lifestyle changes for a few months, you may need to take a medicine called a statin.

If you have high blood pressurediabetes, or coronary artery disease (CAD), your doctor may want you to take a statin right away. This is because your chance of having a heart attack is higher.

Research shows that people who have a high risk for heart attack could benefit from taking higher doses of statins to lower their LDL cholesterol as much as possible. The more these people can lower their LDL, the less likely they are to have a heart attack.  Things that increase your risk for heart attack include:
·                     Having high blood pressure.
·                     Smoking.
·                     Having low HDL (good) cholesterol.
·                     Having peripheral arterial disease, which is narrowing of the arteries that supply blood to the legs, abdomen, pelvis, arms, or neck.
·                     Having diabetes.
·                     Having a family history of heart disease.
·                     Being age 45 or older if you are a man, and age 55 or older if you are a woman
__._,_.___

Friday, February 3, 2012

உமிழ்நீர்


ச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
ல்ச்சி என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்
உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..
உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.
பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.
உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.
மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.
ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.
உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.



Thursday, February 2, 2012

கர்ப்ப காலத்தில்


கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.சத்தாக உணவுகளை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.டாக்டர்கள் கர்ப்பகாலத்தில் நல்ல சத்தான உணவை உட்கொள்ள அறிவுருத்துகின்றனர்.
அதன்மூலம் தாயின் எடை அதிகரிக்க வேண்டும்.அதற்காக மிகஅதிகமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதில்லை.பொதுவாக சாதாரண எடையுள்ள ஒரு பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும்.அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிகமுக்கியம்.கர்பம் அடைந்த பெண்களுக்கு 100 முதல் 300 கலோரிகள் தேவைப்படும்
குறைவான உடல் எடை கொண்ட பெண்கள்  தன்னுடைய கர்ப்பகாலத்தில் 13 முதல் 18 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.அதிக உடல் எடையுள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் 7 முதல் 11 கி.கி வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னுடைய எடையை குறைத்து கொள்வது மிக தவறான ஒன்று ஏனேனில் வயிற்றில் உள்ள குழந்தையை அது பாதிக்க நேரிடும் ஓவ்வொரு மாதமும் 1கிலோவுக்கு குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.குழந்தை வயிற்றில் இருக்கும் போது போதியளவு உணவு உட்கொள்ளவேண்டும்.அதிக அளவிலான உணவு எடுத்துகொண்டால் குழந்தை பருத்து ஆபரேஷன் செய்ய நேரிடும்.போதிய அளவு உணவை எடுத்துகொண்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டும்
அதிக உடல் எடை ஆபத்தானது என்று நீங்களே முடிவு செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்.அதிக எடை காணப்பட்டால் நடைபயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிக உப்பு சேர்த்து சாப்பிடகூடாது.உப்பின் அளவில் கட்டுபாடு வேண்டும்.அதிக அளவிலான உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கவேண்டும்
கர்ப்பகாலத்தில் உடல் எடை எவ்வாறு மாறுபடுகிறது என்றால் குழந்தை 3.5 கி.கி, நஞ்சுக்கொடி1 கி.கி, முதல்1.5 கி.கி வரை மார்பகத்திசுக்கள் 1 முதல் 1.5 வரை இரத்த ஒட்டம் 2 கி.கி பிரசவத்திற்கான காலகட்டத்தில் கொழுப்பு 2.5 முதல் 4 கி.கி வரை தாய்பால் கொடுத்தல் கர்ப்பபை விரிவு 1 முதல் 2 கி.கி வரை.
கர்பகாலத்தில் பெண்கள் உணவுமுறை உடற்பயிற்சி என டாக்டர்கள் அறிவுரைப்படி கேட்டு நடந்துகொள்ள வேண்டும்

தாயின் கடமை.


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.
· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.
· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

தாய்மை ஒரு இனிய அனுபவம்


திருமணமானவுடன் உடனடியாக கருத்தரிப்பதை விரும்பாத தம்பதிகள் அதற்கேற்ப திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். கருத்தரித்தபின் அபார்ஷன் செய்து கொண்டால் அடுத்த குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கும், தாயின் உடல் நிலைக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும்!
கர்ப்ப காலத்திற்குத் திட்டம் போடும் பொழுது கூட இரத்த உறவுகளில் திருமணம் செய்து கொண்டவரா, அவர்களது பரம்பரையில் யாருக்காவது பெரிய வியாதிகள் இருக்கிறதா? என்பதை எல்லாம் மருத்துவரிடம் சொல்லி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
கர்ப்பம் தரித்தவுடன், அல்லது மாதவிலக்கு 15 நாட்கள் தள்ளிப் போனவுடன் வேறு ஏதேனும் வியாதிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தள்ளிப் போட வேண்டும். ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்து, அதற்கு ஃபோலிக் ஆஸிட் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடலாம்!
கர்ப்பகாலத்தில் வேறு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவருடைய ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் வரும் சுகருக்கு மாத்திரை போடக் கூடாது. சர்க்கரை நோய் மருத்துவரைப் பார்த்து உணவு மூலமே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால் வாரம் ஒருமுறை, இருமுறை இரத்தப் பரிசோதனை செய்து இன்சுலின் போட்டுக் கொள்ளலாம். அப்படிச் செய்யாமல் இருந்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும். பிறவிக் கோளாறுகளும் வரலாம். குழந்தைக்கு சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்பு உண்டு. ஏன் வயிற்றிலேயே குழந்தை இறக்கக் கூட வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருக்குமானால் ஸ்பெஷல் கவனம் தேவை. டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சாதாரணமாகக் கால்கள் வீங்கித் தானாகக் குறைந்து விடுமானால் பிராப்ளம் இல்லை. ஆனால் உடல் முழுதும் வீங்கி வந்தால் நிச்சயம் அது ஹை பி.பி. ஆக இருக்கும்.
கர்ப்பம் உறுதியானால் தலைசுற்றல், வாந்தி, லைட்டாக உதிரம் கூட வரலாம். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். ப்ரூட்ஸ், தண்ணீர் என நிறைய எடுத்துக் கொள்ளலாம். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வாந்தி அதிகமாக இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரத்த சோகை இருந்தால் டயட்டில் பீட்ரூட், கேரட், பேரீச்சை, ஆப்பிள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.
அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட், கோக் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொள்ளக்கூடாது.
கர்ப்ப காலத்தை: முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
முதல் ஆறு மாதங்கள், மாதம் ஒரு முறையும், மீதி மூன்று மாதங்கள் மூன்று வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப்புக்குப் போக வேண்டும்.
முதல் மூன்று மாதங்களில் வாந்தி, எடை குறைதல், களைப்பு, தலைசுற்றல் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் இரத்தப் பரிசோதனை எந்தப் பிரிவு இரத்தம், பால்வினைத்தொற்று போன்ற நோய்கள் இருக்கிறதா, முக்கியமாக இரத்தம் நெகடிவ் குரூப்பா, இரத்த சோகை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டம்
முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவினைத் தவிர்க்கலாம் அல்லது மனைவியின் உடல் நிலையைப் பொறுத்து மிதமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பிரயாணங்கள் வேண்டாம்.
கர்ப்பத்தின் போது யோகா, உடற்பயிற்சிகள் செய்வது என்றால், வயிறு விரிந்து சுருங்கும் சில பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
முதலாவது, இரண்டாவது மாதத்தில் மூச்சுப்பயிற்சி மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு மனைவியுடன், கணவனும் சேர்ந்து செய்தால், இருவருக்கும் இடையில் நல்ல ஒரு புரிதலும், இன்வால்வ் மென்ட்டும் வரும்! நடைப் பயிற்சியும் நல்லது.
மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கரு, கர்ப்பப்பைக்கு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது ஸ்கேன் இது குழந்தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.
மூன்றாவது ஸ்கேனை பதினாறிலிருந்து இருபது வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.
நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி.யும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (இதற்கு முன் இல்லாமல் இருந்து இப்பொழுது இருந்தால் பயப்படத் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஆறு வாரங்களில் இது சரியாகி விடும்.)
குழந்தையின் அசைவு 7ம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
வாரம் அரை கிலோ எடை ஏறுவதுதான் மெடிக்கலி ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவகாலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடைகூடும்.
கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக்கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.
டெலிவரி நேரத்தில் அல்லது 9வது மாதத்தில் சில நேரத்தில் வலி தோன்றும்... பிரசவ வலி என்றால் விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். போகப் போக வலி அதிகரிக்கும். சாதாரண வலி என்றால் வந்து விட்டுப் போய் விடும்.
எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல்லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரைத் தேடிப்போகவேண்டும்.
35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.
வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம். ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.
கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்!