Sunday, June 26, 2011

புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?



பிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்
கழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.
இதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர் அதுபற்றி முடிவு எடுங்கள்.

Friday, June 24, 2011

முதுமையில் தாம்பத்யம்


Sex
வயதான பிறகும் அன்பான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்டநாட்கள் உயிர் வாழ்வதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் உயிர் வாழலாம்
டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.
நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.
வயது ஒரு தடையல்ல
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.
மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கம்
பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது.
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.
எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

Thursday, June 23, 2011

குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?



முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே, நிறைமாத குழந்தைகள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன.
பிறந்த குழந்தையின் எடை, 2.5 கிலோ கிராம் இருந்தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும், குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன. ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும், இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் கிராமிற்கு குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க, இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளை பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
இந்தக் கருவிகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
தாய்ப்பால் கொடுப்பது எப்போது: பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த, குழந்தை முழு தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தாய்ப்பாலில், குழந்தைக்கு தேவையான புரதம், நீர்ச்சத்து, தாதுப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு, எட்டு முதல் 10 முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என, ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்து குடிப்பதால், வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால், உணவு பாதையில் இருந்து, மீண்டும் வாய் வழியாக திரும்புவதாலும், வாந்தி ஏற்படுகிறது. இதனால், பயப்பட தேவையில்லை. குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், மருத்துவரை அணுகி, உணவு பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள், பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மலம் கழிக்கும். இவை அனைத்தும், இயற்கையான செயலே. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை எனில், மருத்துவரின் அறிவுரைப்படி, தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சிகிச்சை தர வேண்டும்.

Monday, June 20, 2011

மாமரம்

மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது.  சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர்.  அதுபோல் முக்கனியில் முதல் கனியும் மாங்கனிதான்.
மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான்.  குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும்.
மாமரத்தை, ஆமிரம், எகின், சிஞ்சம், சூதம், குதிரை, மாழை, மாந்தி என பல பெயர்களில் சித்தர்கள் அழைக்கின்றனர்.  மா, பெருமர வகையைச் சார்ந்தது.  இதில் பல வகைகள் உள்ளன.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில்  கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  மா இலை ஒரு கிருமி நாசினியாகும்.    வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.  இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து  தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
மாவின் கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூ
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
மாம்பிஞ்சு
இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும்.  வாந்தி, குமட்டல் நீங்கும்.
மாங்காய்
மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.  அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.   மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.
மாம்பழம்
கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது.
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
வேத சத்திய மாக விளம்புவோந்
தாது விர்த்திருக்குந் தம்பன மாங்கனி
போதம் மர்த்தனம் புன்காயி னால்வடு
வாத பித்த கபங்களை மாற்றுமே
(அகத்தியர் குணவாகடம்)
மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.  இதனை  கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.
மாங்கொட்டை
பேசுமே சீதப் பெருக்குஞ்சோ ரிக்கடுப்பும்
வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு - மாசுடைய
பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் காணில் வாது
-அகத்தியர் குணவாகடம்
மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.
மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
மாம்பிசின்
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
அளவில்லாப் பயன்களை அள்ளித்தரும் மாமரத்தை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Tuesday, June 14, 2011

புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்!


புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி பலப்பல கேள்விகள் பத்தி நம்மில் பலருக்கு அக்கரையோ, ஆர்வமோ கிடையாது. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிகளையும் எடுப்பதில்லை!
ஆனா, ஒருத்தருக்கு புற்றுநோய் வந்திருச்சி அப்படீன்னு யாராவது சொல்லிட்டா போதும், அங்கே முதல் ஆளா போய் நின்னு, என்னது அவருக்கு புற்றுநோயா? அப்படீன்னு ஒரு பேரதிர்ச்சியை முகத்துலயும் வார்த்தைகள்லேயும் வெளிப்படுத்தி,
"அடப் பாவமே.....! அவர் என்ன பாவம் பண்ணினாரோ தெரியலை. அவருக்கு புற்றுநோய் வந்திடுச்சி. புற்றுநோய்க்கு இதுவரைக்கும்/இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல (?). இனி என்ன செய்ய, அவரு இருக்கப்போறது 6 மாசமோ ஒரு வருஷமோ. அதுவரைக்கும் அவரை நல்லா பார்த்துக்குங்க" அப்படீன்னு சொல்லிட்டு போய்விடுகிறோம்.
"புற்றுநோயைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாம இருக்குறது கூட தப்பில்லைங்க. ஆனா, அந்த புற்றுநோயைப் பற்றி நமக்கு இருக்குற அரைகுறை அறிவை அடிப்படையா வச்சிக்கிட்டு, புற்றுநோய் குறித்த தவறான கருத்துகளை சமூகத்துல பரப்புறது மிகப்பெரிய தப்புங்க! இதை நாம எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கனுமுங்க"
இப்படி குத்துமதிப்பா, யாரோ எங்கேயோ சொன்னது, சினிமாவுல பார்த்ததுலேர்ந்து தெரிஞ்ச அரைகுறை விவரங்களினடிப்படையில, தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தரோட வாழ்க்கையோட விளையாடிடுறாங்க நம்மில் பலர்! விளைவு, சம்பந்தப்பட்டவரின் புற்றுநோய் அவரின் உடல்நிலையை பாதிக்கிறதோ இல்லையோ, இம்மாதிரியான அவநம்பிக்கை, அரைகுறை அறிவின் வெளிப்பாடுகளாக வந்துவிழும் வார்த்தைகள், நோயாளியின் மனதை வெகுவாக பாதித்துவிடுகிறது.
இதனால், பல புற்றுநோயாளிகள் அவர்களின் புற்றுநோயின் நிலையை மருத்துவரை அணுகியெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மாறாக அவர்களே குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதாவது,
மருத்துவமனைக்கே செல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் புற்றுநோயாளிகள்!
"நாம இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோதான் உயிரோட இருப்போம்(?). அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போவோமே! எதுக்கு இந்த விஷயத்தை போய் வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லிக்கிட்டு, அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து, கடன் வாங்கியெல்லாம் செலவு செஞ்சுக்கிட்டு.....?! எப்படியிருந்தாலும் நம்ம புற்றுநோய் குணமாகப்போறதில்ல. ஏன்னா, எந்த புற்றுநோய்க்கும் (?) இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல(?). அப்புறம் ஏன் வீணா ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சுகிட்டு, வெட்டி செலவு செஞ்சுகிட்டு....."
இப்படித்தான் நம்மில் பலர், பல மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான தரமான சிகிச்சைகள் கிடைக்கும்போதும், தங்களைத் தாங்களே அறியாமையால் மாய்த்துக்கொள்கிறார்கள்! இது பேச்சுக்காக சொல்லும் கதையல்ல! அப்பட்டமான நிஜம்!!
"எனக்குத்தெரிந்த நண்பரொருவர், தனக்கு ஏற்பட்ட தொண்டைப்புற்றுநோயைப் பற்றி சுமார் ஒன்றரை வருட காலம் யாரிடமும் சொல்லாமல், எதேச்சையாக நண்பர்களுக்கு தெரிய வரும் வேளையில், புற்றுநோயின் மிக மிக முற்றிய நிலையில் அவர் இருக்க, அவரை வற்புறுத்தி உடனே  மருத்துவமனை அழைத்துச்சென்று பார்க்கும்பொழுது, அவருக்கு இன்னும் சில மாத காலமே வாழ்க்கை என்னும் துர்பாக்கிய நிலை தெரியவந்தது......"
ஆனால், தொண்டைப் புற்றுநோயின் யதார்த்தம் முற்றிலும் எதிர்மறையானது! அதாவது, தொண்டையில் பிரச்சினை என்று தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதித்து உண்மையை தெரிந்துகொண்டால், ஏற்பட்டிருப்பது புற்றுநோயென்றாலும், நோயின் ஆரம்ப நிலையிலும், சற்றே முற்றிய நிலையிலும் அதை முழுவதுமாக சரிசெய்து விட முடியும். அதற்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் 100% உத்திரவாதமளிக்கிறது!
இதற்கு என்னதான் தீர்வு???
எனக்குத் தெரிந்தவரை இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அதுதான் புற்றுநோயைப் பற்றிய சமுதாய விழிப்புணர்வு! புற்றுநோய் என்றால் என்ன என்னும் அடிப்படை கேள்வி தொடங்கி, புற்றுநோய்களை எதிர்கொண்டு எப்படி வெற்றிகரமாக மீண்டு வருவது என்பது குறித்த புரிதல் வரையிலான அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்வதுதான் புற்றுநோய் குறித்த சமுதாய விழிப்புணர்வு!
இத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் மற்றும் ஊடகத்துறையின் கடமை! ஆனால் யதார்த்தம் என்னவென்றால், புற்றுநோயை விட குறைவான எண்ணிக்கையில் உயிர்பலி கொண்டுவரும் எய்ட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு (அதான் உங்களுக்கு புள்ளிராஜாவுல ஆரம்பிச்சி தில்லுதுற வரைக்கும் நல்லா தெரியுமே!) புற்றுநோய்க்கு இல்லை என்பதுதான்!
இத்தகைய விழிப்புணர்வை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மருத்துவமனைகள் செய்துவருகின்றன என்றாலும் பலனொன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரமாக இருந்துவந்த புற்றுநோய் இறப்புகள் இன்று பல லட்சங்களாக உயர்ந்து நிற்பதே அதற்கு சான்று. காரணம், புற்றுநோய் குறித்த பெரும்பாலான நூல்கள், பிரசுரங்கள் என எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழில் புற்றுநோய் குறித்த விளக்கமான நூல்கள் மிக மிக குறைவு.
அதிலுள்ள வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்பிவிடும் முயற்சியாக எழுதப்பட்டதுதான் "ஏன் உருவாகிறது புற்றுநோய்" என்னும் தலைப்பிலான என்னுடைய புதிய நூல்! இதில் புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், புற்றுநோயினால் உண்டாகும் உபாதைகள், புற்றுநோய்களை கண்டறியும் முன்பரிசோதனைகள், புற்றுநோய்களுக்கான நவீன சிகிச்சைகள், புற்றுநோய்களை தவிர்க்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பல மர்மங்கள்  எனப் பல விவரங்களை, மிகவும் எளிமையாக எடுத்துச்சொல்ல முயன்றிருக்கிறேன்.......
"ஏன் உருவாகிறது புற்றுநோய்? எதிர்கொள்வது எப்படி?" நூலுக்கான எனது முன்னுறை.....
பிறப்பு, வளர்ச்சி, வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த குணாதீசியங்கள், திறன்கள், குறைபாடுகள் மற்றும் இறப்பு என எல்லாம் ஒன்றோடொன்று இரண்டறக்கலந்த மனிதனின் தினசரி வாழ்க்கையை, அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. மனிதனைத்தாக்கும் உயிர்கொல்லியான புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல!



ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அந்த நான்கில் மூன்று பேர் பெற்றோர், ஆசிரியரின் சொற்படி நல்வழிப்பாதையில். ஆனால் ஒரு பிள்ளை மட்டும் ஏனோ தவறான பாதையில் தறிகெட்டு போய்விடுகிறது! அதற்கு காரணம், பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கவனக்குறைவு, கூடா நட்பு, ஊழ்வினைப்பயன், முன்ஜென்ம பாவ புண்ணியம் அல்லது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத வேறு ஏதோ ஒரு காரணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடும்பத்து பிள்ளைகளில் தவறிப்போன ஒரு பிள்ளைபோல, ஒரு உயிரணு குடும்பத்தில் தவறிப்போய் தறிகெட்டு வளரும் ஒரு உயிரணுதான் இந்த புற்றுநோய் உயிரணு/புற்றணுவும்! ஒரு ஆரோக்கியமான உயிரணு ஏன், எப்படி புற்றணுவாகிறது? அதை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு தெளிவாக விடை சொல்ல முயற்சித்துள்ளேன்.
புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், பல நூல்கள் வாசித்த அனுபவம், ஆய்வனுபவம் மற்றும் ஆய்வறிக்கைகளின் முடிவுகளிலிருந்து, கவனமாக தொகுக்கப்பட்ட தகவல்கள் என ஒரு வருடக் கால உழைப்பில் உருவான கலவைதான் இந்த நூல்!
இந்நூல் எழுத வாய்ப்பளித்த பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. எனது முந்தைய நூலான "பாலியல்-இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?" எனும் தலைப்பில் வெளிவந்த நூலிற்கு வாசகர்கள் வழங்கிய வரவேற்பிற்கும், அதேபோல் இ ந் நூலினை வாசிக்கத் தொடங்கியிருக்கும் தங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
பத்மஹரி.

Friday, April 8, 2011

Acquired Immune Deficiency Syndrome

AIDS என்றால் என்ன?

AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே. HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும். HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.

உங்கள் நோய் எதிர்ப்பு ஏற்பாட்டை HIV வெற்றி கொண்டுவிடுமாயின் சாதாரணமாக உங்களைப் பீடிக்காமல் தடுக்கும் ஏற்பாடு தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின் மரணம் சம்பவிக்கும்.

AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை.

HIV எப்படி வருகிறது?

HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.

குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.

குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.

பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.

இதுதான் HIV பரவும் இருவழி. வைரஸ் உடையத்தக்கது. உடலுக்கு வெளியே இந்த வைரசு நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் நுளம்பு கடிப்பதாலும் பரவிவிடாது.

உடல் திரவங்கள் என்றால் என்ன?

உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும்.

அப்படியென்றால் குருதி, விந்து ஆகிய இரண்டு மட்டும் ஏன் குறிப்பிடப்படுகின்றன?

இரத்த வழங்கலின் போது, பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் தோலுக்கூடாக HIV குருதியினூடாக மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை. பாலியல் உறவின் போது உறுப்பு உள்நுழைவு காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதனால் HIV உள்ள விந்து தோல் ஊடாக உடல் எங்கும் பரவுகிறது.

பிறெஞ்சு முத்தத்தாலும் HIV புகுவதற்கு ஓரளவு இடமுண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும். ஆனால் ஆச்சரியம் என்வென்றால் HIV மக்கள் நினைப்பது போல மற்றவருக்குப் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள பலமான அமிலங்களால் சமிபாடு அடைந்து விடுகிறது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது பாலியல் உறுப்புகள் உள்நுழைவதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை. அதேவேளையில் யோனியிலோ, குதத்திலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இல்லாவிடினும் HIV நுழைந்து பரவுவது சற்று கடினமாக இருக்கும். இந்த வைரசு பிளவுபடக்கூடியது. ஆதலால், தோல் உட்புகாது விடின் இறந்துவிடும். பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது .

AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?

இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவு கொண்டதாலேயே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.

AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.

கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?

(கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் றப்பர் உறை)

உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது.

கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது.

தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.

பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா?

ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும்.

ஹேப்ஸ் (Herpes) என்றால் என்ன?

ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன.

நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.

இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.

எது சாதாரணமான பாலியல் உறவால் பரவும் நோய்?

சிஸ்ரிரிஸ் (Cystitis)

சிஸ்ரிரிஸ் என்பது சிறுநீரைச் சேகரித்து வைக்கும் மென் சவ்வினாலான பையில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெரும்பாலும் இது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தேனிலவு நோய்த் தொகுதி என்றும் அழைப்பர். ஏனெனில் பெண்கள் முதன் முறையாகப் பாலுறவு கொள்ளும் போதுதான் ஏற்படுகிறது. பாலியல் உறவால் பரவும் நோய்களில் மிகவும் குறைந்த வீரியமுடையது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் பெண்கள் ஓரளவு பயந்து விடுவார்கள்.

சிஸ்ரிரிஸ் ஆண்களோடு பாலுறவு கொள்வதால் மட்டும் பரவுவதில்லை. கருத்தடை உறை அணிந்து பாலுறவு கொண்டாலும் கூட ஏற்படுகிறது. உண்மையில் நடப்பது இதுதான். பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பிலிருக்கும் பக்hPறியா பாலியல் உறவின்போது ஆண்குறியின் அசைவுகளினால் சிறுநீர் சேகரிக்கப்படும் பையை அடைகிறது.

இந்நோயின் அறிகுறி பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது வயிற்றில் அதிக நோவைத் தருகிறது. நோயை உணரும் நரம்புகள் பெண்ணின் பிறப்புறுப்புக் கருகில் இருப்பதனால் பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வை ஒத்து இருக்கிறது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறுநீரில் குருதியின் அடையாளம் தென்படுகிறது.

பெண்ணிற்கு சிஸ்ரிரிஸ் அடிக்கடி ஏற்பட்டால் ஆணின் சிறுநீரில் பக்hPறியா உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவன் மீண்டும் நோய் பரவ வழி வகுப்பான். வேறொரு ஆலோசனை என்னவென்றால் பாலியல் உறவுமுடிந்தவுடன் சிறுநீர் கழியுங்கள். அல்லது சிறுநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் விதத்தில் பழச் சாற்றைப் பருகுங்கள்.

பாலியல் உறவால் பரவக்கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான பயங்கரமான நோய் எது?

ரிறைகோமோனியாசிஸ், கண்டியாசிஸ், கிளாமீடியா, கொன்ஹோறியா, சிபிலிஸ் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.

இவை நுண்ணுயிர்க் கொல்லிகளால் குணமாக்கலாம். சில மாத்திரைகளை யோனி முகிழிற்குள் புகுத்திவைப்பதால் சுகப்படுத்தலாம். இந்நோயின் புதிய தோற்றங்கள் நடைமுறையிலுள்ள நுண்ணுயிர்க் கொல்லிக்குக் கட்டுப்படாது. மேலும் வீரியம் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியே தேவைப்படுகிறது.

ரிறைகோ மோனியாசிஸ் (Trichomoniasis) என்றால் என்ன?

யோனி முகிழிலிருந்து துர்நாற்றம் வீசும் மஞ்சள் கலந்த வெண்ணிற கழிவுப் பொருள் கசிவடைகிறது. ஆணின் ஆண்குறி வீங்கி இருக்கும். அல்லது பெண்ணின் யோனிப் பகுதியில் சொறிவும் வீக்கமும் காணப்படும்.

கண்டிடியாசிஸ் (Candidiasis) என்றால் என்ன?

இந்நோயின் அறிகுறி யோனி முகிழிலிருந்து தடிப்பான வெள்ளை நிறக் கழிவு கசிகிறது. யோனிப் பிரதேசத்தில் சொறியும் உணர்ச்சி தோன்றுகிறது. இது பொதுவாகக் காணப்படும் நோய். இதனை சாதாரணமாகக் குணப்படுத்தலாம். பெண்ணிற்கு மட்டும் ஏற்பட்டாலும் கூட ஆண் பெண் இருவரையும் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தல் வேண்டும்.

கிளமீடியா (Chlamydia) நோய் இருக்கிறது என்று எப்படி அறியலாம்?

இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதிலும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்ச்சி தென்படும்.

பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில் இடுப்பு வீக்கநோய் ஏற்பட சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது. கருவில் வளரும் குழந்தை கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் (குயடடழியைn வரடிநள) நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும்.

கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் - பெண் உடன் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

கொன்ஹொறியா (Gonhorrea) நோயின் அறிகுறிகள் என்ன?

இதுவும் கிளாமீடியா போன்றதே. கிளாமீடியாவால் வரும் ஆபத்துக்களே இந்நோயினாலும் ஏற்படுகிறது. ஆனால் இதனால் தொண்டை வலியும் வயிற்றோட்டமும் ஏற்படுகிறது.

இதனாலும் இடுப்பென்புப் பகுதியில் வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு புறஸ்ரேட் சுரப்பியில் நோய் தொற்றிப் பரவுகிறது. இருவருக்கும் மூட்டுகள், தோல், குருதியோட்டம் ஆகியவற்றில் பரவுகிறது.

சிபிலிஸ் (Syphilis) நோயின் அறிகுறிகள் என்ன?

இது இருப்பதன் அறிகுறி ஆண்குறியின் மீது நோவற்ற வடு காணப்படும். இது போலவே பெண்ணின் யோனி முகிழ்வாயிலும் அல்லது குதவாசலிலும் காணப்படும்.

இந்த நிலையில் நோயைக் குணப்படுத்தாவிட்டால் தோலில் கொப்பிளங்கள் தோன்றும், அதோடு நோயாளர் பார்வை இழப்பார். இந்த நிலைக்குப் பிறகும் நோயைக் குணப்படுத்த முயலாவிட்டால் இதயமும் மூளையும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக மரணமும் சம்பவிக்கும்.

சிபிலிஸால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கின்ற குழந்தையும் கூட சிபிலிஸ் உடன் தான் பிறக்கும். பார்வை குன்றியும், சித்தம் பேதலித்தும், உடல் ஊனமுற்றும் இருக்கும்.

சிபிலிஸ் நோய்க்கு இலக்கானால் பாலியல் உறவுகொண்ட இருவரையும் பரிசோதனைக்குட்படுத்தி வைத்திய சிகிச்சை செய்தல் வேண்டும்.

பாலியல் உறவால் ஏற்பட்ட குணப்படுத்த முடியாத வேறேதும் நோய் இருக்கிறதா?

ஆம். செங்கமாரி - மங்கமாரி (Hepatitis B) இதற்கான தடுப்பூசி இருக்கிறது தான். இந்நோய் ஓய்வாய் இருப்பதாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாலும் சாதாரண செங்கமாரி நோயைப் போலவே குணப்படுத்தலாம். ஆனால் இந்நோய் உங்களைப் பலவீனமாக்கி, ஈரலையும் சிதைவுக்குள்ளாக்கி விடும்.

செங்கமாரி மங்கமாரி (Hepatitis B) என்னால் என்ன?

இந்நோயின் அறிகுறிகள் இருமல், தொண்டைப்புண், மூட்டு வலி என்பனவாகும். அதோடு செங்கமாரி அறிகுறிகளான கடும் அலுப்பும் உணவில் விருப்பு இன்மையும் ஆகும். காமாலை நோயின் அறிகுறிகளான தோலின் நிறம் மஞ்சள் ஆவதும் கண்கள் வெளிறி இருப்பதும் சிறுநீர் கடும் கபில நிறமாயும், மலம் வெண்களிமண் உருவிலும் தோன்றும்.

செங்கமாரி - மங்கமாரி நோய் HIV போல மாசுபட்ட குருதியாலும் மாசுபடர்ந்த மருந்து செலுத்தும் ஊசியாலும் பரவக்கூடியது. HIV யை விட தொற்றில் பரவுவதில் தீவிரமானது.

Tuesday, March 22, 2011

பருவ வளர்ச்சி

பருவமானவர்கள் என்றால் என்ன?

சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.

இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது..


பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவமாகி விடுகின்றனர்.

எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது?

ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக்கூடியதாய் இருக்கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ நிகழலாம். இம்மாற்றம் ஏற்படும் சராசரி வயது பத்து ஆகும்.

பருவமாவதற்கு எது காரணமாகிறது?

இதெல்லாம் ஏற்படக் காரணமாய் இருப்பது மூளையின் ஒரு பகுதியான உப தலமஸ் ஆகும். இந்த உபதலமஸ் ஓமோன்கள் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களைச் சுரக்கின்றது. இவை பருவமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேறு ஓமோன்களைத் தட்டி எழுப்புகிறது. இவை உங்களை வளர்ந்த பெண் ஆக்குகின்றன.

நீங்கள் ஏழுவயதாய் இருக்கும் போதே இந்த ஓமோன்கள் முதன் முதலாகச் சுரக்கத் தொடங்குகின்றன.

ஓமோன்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரியவை. பெண்களின் உடல் கூடுதலான பெண் ஓமோன்களையும் சிறிதளவு ஆண் ஓமோன்களையும் சுரக்கின்றன.

சில பெண்கள் பருவமாவதற்கு முன் பொருமிக் காணப்படுவதேன்?

பருவமாவதற்கு சற்று முன்பாக ஏற்படும் திடீர் வளர்ச்சியின் போது சற்று பருமனாகிறார்கள். இதனை இளமைக் கொழுப்பு என்பார்கள். கூடுதலான இளமைக் கொழுப்பு பெண் பருவமாகப்போகிறாள் என்பதை மூளைக்கு அறிவுறுத்தும் அறிகுறியாகும். மெல்லிய பெண்கள் இந்த அறிவுறுத்தலைச் செய்யாதபடியால் காலம் தாழ்த்தியே பருவமாகின்றனர். வளர்ச்சி முகிழ்ந்ததும் இளமைக் கொழுப்பு மறைகிறது. 15,16 வயதைப் பெண் அடையும் போது சாதாரணமாக இது போய்விடுகிறது. அதற்குப் பிறகு ஏற்படும் பருமனை இளமைக் கொழுப்பு என்பதில்லை.

முதலில் தோன்றும் மாற்றம் என்ன?

வளர்ச்சி, நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள். இது நாடகம் போன்று நடைபெறுகிறது. ஏனெனில் முன்னிரு ஆண்டுகளாக வளர்ச்சி குன்றியிருக்கும். இது ஆகாய விமானம் இறங்கு பாதையில் ஓடி மேலே எழுவதற்குமுன் உள்ள நிலையை ஒத்திருக்கிறது. வளர்ச்சி ஆரம்பிக்குமுன் அநேக பெண்கள் எவ்வளவு உணவை உட்கொண்ட போதிலும் மெலிந்தும் கால்கள் நீண்டும் காணப்படுவர்.

இத்தகைய வளர்ச்சியின் போது சற்று கூடுதலாக நித்திரை கொள்ள விரும்புவர். கிழமை முடிவு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சற்று நேரங்கழித்தே நித்திரை விட்டு எழ விரும்புவர். பிற்பகல் நேரமும் சற்று நேரம் நித்திரை கொள்ள விருப்பம் கொள்வர். ஏனெனில் வளர்ச்சிக்குரிய ஓமோன் நித்திரை கொள்ளும் போதுதான் சற்று அதிகமாகச் செயல்படுகிறது.

இந்த வளர்ச்சி ஓமோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உண்மையில் அன்றோஜன் என்கிற ஆண் ஓமோன் ஆகும். இதில் ஆச்சரியமானது என்னவென்றால் எந்த ஓமோன் வளர்ச்சியைத் தூண்டக் காரணமாயுள்ளதோ அதே ஓமோன் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அதன் காரணமாகத்தான் சிலர் முன்னரே வளரத்தொடங்கி விரைவிலேயே அவர்களது வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. அதனால்தான் நன்றாக உயருவதில்லை. அதன் காரணமாகவே காலம் தாழ்ந்து வளர ஆரம்பித்தால் காலம் கடந்தே வளர்ச்சி முடிவுறுகிறது. அதனாலேயே அவர்கள் உயர்ந்து வளர்கின்றனர்.

அதோடு அதிகமாகப் பசிதோன்றி பலமுறை பசி எடுக்கிறது. அதனால் கூடுதலான உணவு உண்கின்றனர். குழந்தைப் பருவம் மாறுவதையும் புதியவகை உணவில் விருப்பமும் ஏற்படுவதைக் கண்டு தாயார் பூரிப்படைகிறார். இதனால் இப்பெண்ணிற்கு உணவு தயாரிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறாள். ஏனெனில் பெண் பருவமாகிவிட்டாள். காய்கறிகளிலுள்ள நச்சுத்தன்மையை நடுநிலையாக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள். அதன் நிமித்தமே சிறுபராயத்தில் வெறுப்பு ஏற்பட்டது. காய்கறிகளும் உயிர் உள்ளவையே. அதனால் அவற்றை நீங்கள் உண்ண வேண்டும் என்பதில் அவற்றிற்கு ஆர்வமில்லை. அதனால் அவை அவற்றை நச்சுப் பொருள்களாக்கி வெறுக்கச் செய்கின்றன. அவற்றை உண்டால் வயிற்றுவலியோ தலைவலியோ ஏற்படுகிறது. அவர்கள் வளர்ச்சியுறும் போது இந்த நச்சுப் பொருள்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். சிறுபிள்ளைகள் சில காய்கறிகளை விரும்பாதற்குக் காரணம் அதில் காணப்படும் நச்சுத் தன்மையே. கர்ப்பிணிகள் சிலருக்கு சிலவற்றை உட்கொண்டபின் சுகவீனம் ஏற்படுவதற்குக் காரணம் கருவிலுள்ளவை அவற்றைத் தவிர்க்க விரும்புவதே. அந்தக் கருவிலுள்ள அவனோ அவளோ கர்ப்பிணிகள் அவற்றை உண்டால் தமக்குத் தீங்கு விளையும் என்று கருதுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி அவளுக்கு மாதவிடாய் ஏற்படும் போது குன்ற ஆரம்பிக்கிறது. அவளுக்கு 16 முதல் 18 வயது ஏற்பட அவளுடைய வளர்ச்சி முற்றாக நின்றுவிடுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி உயரமாக்குவது மட்டுந்தான் செய்கிறதா?


உண்மையில் இல்லை. திடீர் வளர்ச்சி தோன்று முன்பிருந்தே பெண் ஓமோன் செயல்படத் தொடங்குகின்றன. அது உடலில் வேலை செய்ய ஆரம்பித்து பருவமான பெண்ணாக மாற்றுகிறது.

நீங்கள் அவதானிக்கும் முதல் மாறுதல் என்ன?

நீங்கள் உயரமாக வளரும் போது உங்கள் இடுப்புகள் அகன்று இடுப்பு என்புகள் மாற்றமடைகின்றன. உங்கள் இடுப்பு வெறும் என்பாக மட்டுமாக இராது. பெண் ஓமோன் கொழுப்பு இடுப்பில் படியத் தொடங்கி அதற்கு வட்ட வடிவத் தோற்றத்தைத் தருகிறது. முலைக்காம்புகள் வளர்வதையோ அரும்புவதையோ அவதானிக்கலாம்.

அடுத்த மாற்றம் என்ன?

யோனிப் பிரதேசத்தில் உரோமங்கள் தோன்றத் தொடங்கும். இதனை பூப்பு உரோமம் என்பர். குழந்தையாய் இருந்தபோது இருந்த உரோமம் சற்று கருமையடைந்து அதன் பிறகு மேலும் தடிப்பமாகி முரட்டுத்தன்மை அடைந்து தலைமயிரைக் காட்டிலும் கூடிய சுருளாக மாறுகிறது.

இதற்கு அடுத்த மாற்றம் என்ன?

அடுத்தபடியாக ஒரு நாள் முலைக்காம்பிற்குக் கீழே காயப்பட்டதனால் ஏற்படுவது போன்ற நோவு தென்படுகிறது. ஏதேனும் அடிபட்டுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் பக்கவாட்டாகப் பார்க்கும் போது ஒரு மாற்றம் தென்படுகிறது. முலைக்காம்பின் கீழ்ப் பகுதி வளர்ந்துள்ளது. உங்களுக்கு மார்பகங்கள் வந்துவிட்டன.

இதே காலக்கட்டத்தில் உங்கள் உள்ளாடையில் தெளிவான வழுவழுப்பான திரவம் படிகிறது. உங்கள் யோனிப் பகுதியில் ஈரமும் வழுவழுப்புத் தன்மையையும் உணர முடிகிறது. இந்தக் கசிவு யோனி மடலிலிருந்து வெளிவருகிறது. குதப் பகுதிக்கு அருகிலுள்ள யோனிப் பிரதேசத்தின் பெரிய இடைவெளி ஊடாக வெளிப்படுகிறது.

கண்ணிற்குப் புலப்படாத மாற்றமும் உண்டா?

ஆம். உடலினுள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வேளையில் தான் கருப்பை, சூலகங்கள், யோனி ஆகியவை உருவாகத் தொடங்குகின்றன.

கருப்பை என்றால் என்ன?

இது பெண்ணின் வயிற்றிலிருக்கும் தலைகுப்புறப் பிடித்தகாய் போன்ற ஒரு பை ஆகும். இது மிருதுவான தசையால் ஆனது. இதில் தான் பிறப்பதற்கு முன்பு குழந்தை வளருகிறது. குழந்தை பிறப்பதற்குத் தயார் ஆனதும் தசை மெல்ல மெல்லச் சுருங்கி குழந்தையை கருப்பையிலிருந்து கழுத்துப்போன்ற பகுதியினூடாகத் தள்ளுகிறது. இக்கழுத்துப் போன்ற பகுதியை யோனிவழியாக சுத்தமான விரலை விட்டுத் தடவி அறியலாம். அது கூம்பு வடிவத்தில் கடினமாகவும், தசைப்பிடிப்பாகவும் இருக்கும்.

யோனி என்றால் என்ன?

யோனி என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாய் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.

சூலகங்கள் என்றால் என்ன?

கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. இதனால்தான் குழந்தை தாயையும் தந்தையையும் ஒத்திருக்கிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது.

கருமுட்டை என்றால் என்ன?

கருமுட்டை என்பது பெண்ணிடமிருந்து வெளிவரும் நுண்ணியகலம். இது ஆணின் விந்தோடு சேர்ந்து குழந்தையை உருவாக்குகின்றது. அது அந்தப் பெண்ணிற்குரிய சகல அம்சங்களையும் கொண்டுள்ளது. அதனால்தான் அந்தப் பெண்ணின் பிரதி அவளின் குழந்தையில் காணப்படுகிறது.

பிறப்புறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றனவா?

ஆம். வெளிப்படையான வளர்ச்சியாக தோல் மடிப்புகள் நீள்கின்றன. இது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படுகின்றது. தோல் மடிப்புகள் சிறு பெண்பிள்ளையாக இருந்த போது இருந்தது போல் இராது. இதனால் அழகு அற்றோ வேறு விதமாகவோ போவதில்லை. தேவையற்ற போதிலும் புற பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைவதேன்? ஆண்களின் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இயற்கை, ஆணையும் பெண்ணையும் ஒரே அடிப்படையில்தான் அமைத்துள்ளது. ஆனால் சற்று மாறுபட்டுள்ளது. அவசியம் அற்ற போதிலும் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. அதேபோல்தான் ஆணுக்கும் முலைக் காம்புகள் தேவையற்ற போதிலும் சற்று வளர்ச்சி அடைகின்றன.

அடுத்து நடப்பதென்ன?

எல்லாம் பெரிய மாறுதல்கள். பூப்பு உரோமம் தடிப்பாகி கூடுதலான பரப்புக்கு வியாபிக்கின்றது. நீளமாகவும் கறுப்பாகவும் மாற்றம் அடைகிறது. கைக்குளச்ச வளைவு (அக்கிள் ) பகுதியிலும் மயிர் முளைக்கிறது. அநேக பெண்களுக்கு முகப் பரு ஏற்படுகிறது. மாதவிடாய் வரத்தொடங்குகிறது.

Wednesday, March 16, 2011

மூளை

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

Friday, March 11, 2011

இயற்கை வைத்திய அகராதி


> *இயற்கை அல்லது கை வைத்தியம் என்பது மிக எளிதானது, மற்றும் தொன்று தொட்டு
> பின்பற்ற பட்டு வருவதாகும். பெரியவர்கள் சாப்பாட்டு வகையில் கையாண்ட  முறைகளே
> ஒரு வகை மருந்தாகும். தற்போது  எல்லாம் துரித உணவு முறைகள்.
>
> இந்த அகராதி எல்லோருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இப்பொழுது.
> எனெனில், எளிதாக போக வேண்டியதற்கு, நீண்ட வழியில் கொண்டு செல்கின்றனர்
> வைத்தியர்கள்.
>
> இதை படித்து எளிய முறையில், நம் உணவு முறையில் சிறிய  உடல் உபாதைகளை நிவர்த்தி
> செய்து கொள்ளலாம்.   *
>
> *அசீரணம்*
>
> கறிவேப்பிலையுடன் சுட்டு புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச்
> சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை
> சரியாகும்.
>
> ஆண்மை
>
> பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது
> உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.
>
> கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
> பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை
> அதிகரிக்கும்.
>
> கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை,
> கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி,
> தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை
> அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.
>
> துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு
> நீங்கும்.
>
> பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச்
> சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.
>
> பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்
> விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
>
> முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி
> சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.
>
> பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில்
> உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
>
> சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால்
> ஆண்மை அதிகரிக்கும்.
>
> சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து
> விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.
>
> ஆஸ்துமா
>
> தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச்
> சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல்,
> ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
>
> முசுமுசுக்கைக் கீரை சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப்
> பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியை ஒரு வெற்றிலையில் வைத்து, தேனில்
> குழைத்து, வெற்றிலையோடு சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
>
> முசுமுசுக்கைக் கீரை சாறில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால்
> ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
>
> துயிலிக் கீரை சாறில் சித்தரத்தையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச்
> சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
>
> இடுப்பு வலி
>
> நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி,
> கழுத்து வலி குணமாகும்.
>
> இதய நோய்கள் குணமாக
>
> மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச்
> சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
>
> கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில்
> எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும்
> 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
>
> பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச்
> சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
>
> வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3),
> மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில்
> சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
>
> ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு
> கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
>
> வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
>
> வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய
> நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.
>
> இரத்த அழுத்தம்
>
> முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும்
> காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த
> அழுத்தம், இதய நோய்கள் குணமாகும்.
>
> பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 கிராம் சீரகத்தைச் சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
>
> முசுமுசுக்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
> தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இரத்த அழுத்தம்
> சீராகும்.
>
> ஆரைக்கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை
> மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால், இரத்த அழுத்த நோய் குணமாகும்.
>
> மணலிக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை
> மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
>
> சுக்குக்கீரையுடன் ஒரு கைப்பிடி அளவு துளசியைச் சேர்த்து கஷாயமாக்கிச்
> சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குணமாகும்.
>
> இரத்த ஓட்டம்
>
> தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம்
> சீராகும்.
>
> இரத்தக் குறைவு
>
> இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக்
> கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு,
> தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச்
> சாப்பிட்டு வரவும்.
>
> இரத்தம் சுத்தம்
>
> இரத்தம் சுத்தமில்லாவிட்டால் சில கோளாறுகள் உடம்மில் ஏற்படுகின்றன. இரத்தத்தைச்
> சுத்தப்படுத்த, பூசணிக்காயை இடித்துச் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான
> தேனைக் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரவும். இரத்தம் சுத்தமாகும்.
> பூசணிக்காய் ஒத்துக்கொள்ளாதவர்கள் இதனைச் செய்ய வேண்டாம்.
>
> அரை கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
>
> புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும்
> காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.
>
> வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால்
> இரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.
>
> தூதுவளைக் கீரையுடன் சம அளவு வேப்பந்துளிர் சேர்த்து கஷாயமாக்கி, அதிகாலையில்
> சாப்பிட்டு வந்தால், இரத்தம் தூய்மையாகும். கிருமிக் கோளாறுகள் நீங்கும்.
>
> பொடுதலைக் கீரையுடன் கடுக்காய் (1), நெல்லிக்கனி (1), தான்றிக்காய் (1)
> மூன்றையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்தம் சுத்தமாகும்.
> உடல் வலிமை உண்டாகும்.
>
> அம்மான் பச்சரிசி கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (3) இரண்டையும் சேர்த்து
> அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
>
> புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ( 2
> சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம்
> தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
>
> சுக்காங் கீரையுடன் வேப்பிலை (இரண்டு), சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து
> அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்களும் குணமாகும்.
>
> பாற்சொரிக் கீரையுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால்
> இரத்தம் சுத்தமாகும்.
>
> இரத்த சோகை
>
> ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15
> நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.
>
> கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து
> அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.
>
> பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த
> உற்பத்தி அதிகரிக்கும்.
>
> இரத்த விருத்தி
>
> பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி
> உண்டாக்கும்.
>
> இருமல்
>
> முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து
> கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
>
> புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
>
> வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை ஸ்பூன் இரண்டையும்
> சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
>
> கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
> தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால்
> இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
>
> தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச்
> சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத
> தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
>
> முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2
> கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல்
> போன்றவை குணமாகும்.
>
> பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட
> இருமலும் குணமாகும்.
>
> வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச்
> சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.
>
> மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால்
> வறட்டு இருமல் குணமாகும்.
>
> உடல் சூடு
>
> அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால்
> உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
>
> கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு
> குறையும். நன்கு பசி எடுக்கும்.
>
> வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து,
> தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
>
> வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு
> குறையும்.
>
> கல்யாண முருங்கை இலையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள்
> தீரும்.
>
> கொடிப்பசலைக் கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்தால்,
> உடல் சூடு, வெட்டைச் சூடு வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
>
> கொடிப்பசலைக் கீரைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச்சூடு,
> கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் தீரும்.
>
> குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
>
> கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு
> குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும்.
>
> பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால்
> உடல் சூடு, குடல் புண் ஆகியவை தீரும்.
>
> புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல்
> சூடு தீரும்.
>
> பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து
> ஊற வைத்து, பிறகு கால வைத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2
> கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
>
> முக்குளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு
> குறையும்.
>
> முருங்கைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும்.
> பொடுகுப் பிரச்னையும் இருக்காது.
>
> பாற்சொரிக்கீரை, முளைக்கீரை இரண்டையும் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
>
> உடல் மினுமினுக்க
>
> அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய
> வைக்கவும். பிறகு அதை நெல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு,
> எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல்
> மினுமினுக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.
>
> உடல் வனப்பு
>
> சிறுகீரையை குடை மிளகாய், சிறு பருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச்
> சமைத்து, தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.
>
> பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கி, அத்துடன் சிறிது மிளகு, உப்பு
> சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும்,
> பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும்
> பெறலாம்.
>
> உடல் வலி
>
> துத்திக் கீரையை தண்ணீரில் போட்டு வேக வைத்து பிறகு, தண்ணீரில் போட்டு
> குளித்தால், உடல் வலிகள் சரியாகும்.
>
> உடல் பருக்க
>
> மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத்
> போல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
>
> உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு
> எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.
>
> பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு
> சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
>
> சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல்
> பெருக்கும்.
>
> உடல் வலிமை பெற
>
> பசலைக் கீரைச் சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி கஞ்சி
> காய்ச்சிக் குடித்தால், உடல் வலிமை பெறும். இளைத்த உடல் பெருக்கும்.
>
> புளிச்சக்கீரை சாறுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை
> பெறும்.
>
> வெந்தயக் கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில்
> எடுத்து அரைத்துக் கலந்து காய வைத்துப் பொடியாக்கித் தினமும் காலை மாலை இரு
> வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை
> நோய்க்கும் சிறந்தது.
>
> தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால், உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
>
> முடக்கத்தான் கீரைச் சாறில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவு போட்டு ஊற
> வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 ஸ்பூன் அளவு எடுத்து, சின்ன வெங்காயம்
> சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை பெறும்.
>
> கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து,
> காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம்
> சுத்தமாகும்.
>
> அம்மான் பச்சரிசி கீரையுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட்டால், உடல் பலம்
> அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.
>
> முசுமுசுகைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம்
> உண்டாகும்.
>
> பாலக்கீரையை அரிந்து, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து
> வதக்கிச் (அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டுக்கோழி முட்டையைச்
> சேர்த்துக்கொள்ளலாம்) சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.
>
> பிண்ணாக்குக் கீரை சாறில் அமுக்கரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்துப்
> பொடியாக்கிச் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உணர்வு நரம்புகளும்
> வலுப்பெறும்.
>
> துயிலிக் கீரை சாறில் அமுக்கரா சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் உடல் பலவீனம்
> தீரும்.
>
> பாற்சொரிக்கீரையைப் பொடியாக நறுக்கி, சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து,
> சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.
>
> எடை குறைய
>
> பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச்
> சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
>
> காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல்
> பருமன் குறையும்.
>
> குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
>
> நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
>
> நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால்
> உடல் பருமன் குறையும்.
>
> முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு
> வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.
>
> வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
>
> எலும்பு ஜூரம்
>
> புளிச்சக்கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்
> எலும்பு ஜூரம் தணியும்.
>
> கட்டி
>
> புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்துபோகும்.
>
> கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, வீக்கம் மற்றும் கட்டிகள் மீது
> கட்டினால், அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுத்து உடைந்து, புண் எளிதில்
> ஆறிவிடும்.
>
> நல்வேளைக் கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை பழுத்து, உடைந்து, சீழ்
> பிடிக்காமல் குணமாகிவிடும்.
>
> துத்திக்கீரை சாறு எடுத்து, பச்சரிசி மாவைக் கலந்து கட்டிகள் மீது
> பற்றுப்போட்டால், அவை பழுத்து உடைந்து விரைவில் ஆறும்.
>
> கணையக் கோளாறு
>
> காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இரண்டையும் சம அளவில் உலர்த்திப்
> பொடியாக்கிச் சாப்பிட்டால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.
>
> கண்கள் அழகு பெற
>
> ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும். சில
> வாரங்களுக்குச் சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கண்கள் அழகு பெறுவதோடு
> சிறந்த ஒளியையும் பெறும்.
>
> கண் நோய்கள் தீர
>
> பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம்
> ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை சாப்பிட்டால்
> கண் பார்வை கூர்மையாகும். கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.
>
> பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டினால் கண்
> நோய்கள் குணமாகும்.
>
> பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகக் தயாரித்து தலையில் தடவிக் குளித்தால் கண்
> புகைச்சல், கருவிழி நோய், கண் அழுத்தம், உடல் சூடு, வெட்டைச் சூடு போன்ற
> அனைத்துப் பிரச்னைகளும் சரியாகும்.
>
> பாலக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு கடைசலாகவோ, சூப்பாகவோ செய்து
> சாப்பிட்டால் கண் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.
>
> கண் புகைச்சல்
>
> சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப்பாகச் செய்து
> சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.
>
> கப நோய்கள்
>
> அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும்
> அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள்
> குணமாகும்.
>
> சிறு கீரையுடன் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து
> கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.
>
> முருங்கைக் கீரைச் சாறில் மிளகு, அதிமதுரம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்திப்
> பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், கப
> நோய்கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.
>
> கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் செய்து
> சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.
>
> கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
> தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும்
> மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.
>
> துயிலிக் கீரை, தூதுவளை இலை இரண்டையும் சம அளவில் அரைத்துச் சாப்பிட்டால் கப
> நோய்கள் குணமாகும்.
>
> கர்ப்பப்பை கோளாறுகள்
>
> சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால்
> கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.
>
> கல்லீரல் நோய்கள்
>
> பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால்
> கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
>
> பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிது மஞ்சள்
> சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
>
> கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் விழுதாக அரைத்து பாலில்
> கலக்கிச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சார்ந்த பாதிப்புக்கள் குணமாகும்.
>
> கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல்
> வீக்கம், இரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
>
> முள்ளங்கிக் கீரை சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள்
> குணமாகும்.
>
> காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால்
> கல்லீரல் வீக்கம் குணமாகும்.
>
> கைப்பிடி அளவு சுக்காங் கீரையை எடுத்து அதில் சீரகம் (20), சின்ன வெங்காயம் (1)
> சிறிது எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில்
> சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புக்கள், மஞ்சள் காமாலை போன்றை குணமாகும்.
>
> கழிச்சல்
>
> துத்திக் கீரையை சாறு பிழிந்து (15 மிலி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால்
> கடுமையான கழிச்சல் நோயும் குணமாகும்.
>
> காச நோய்
>
> முசுமுசுக்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காச நோய் குணமாகும்.
>
> காது நோய்
>
> தூதுவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான
> நோய்கள் அனைத்தும் சரியாகும்.
>
> முடக்கத்தான் கீரைச் சாறில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
>
> நல்வேளைக் கீரைச் சாறை ஓரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால், காது வலி
> குணமாகும்.
>
> காதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா?
>
> அது மாதிரி சமயங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ்
> தண்ணீரில் அரை அவுன்ஸ் உப்பைப் போட்டுக் கரைத்து, அதைக் காதில் கொஞ்சம் விட
> வேண்டும். உடனே உள்ளே சென்ற பூச்சி வெளியே வந்துவிடு•. அப்படி வராவிட்டால்
> காதைச் சாய்க்கவும். தண்ணீரோடு அவை செத்து விழும்.
>
> காமம்
>
> அரைக்கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச்
> சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா கலவிச் சுகம் உண்டாகும்.
>
> முருங்கைக் கீரைச் சாறில் ஜாதிக்காயை உடைத்து ஊற வைத்து எடுத்து உலர்த்திப்
> பொடியாக்கி, தினமும் இரவில் 2கிராம் சாப்பிட்டால், காம உணர்வு அதிகரித்து
> கலவிச் சுகம் உண்டாகும்.
>
> புளிச்சக்கீரையை குடை மிளகாய், கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு
> இச்சை உண்டாகும். போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.
>
> வெங்காயத் தாள், ஓரிதழ்த் தாமரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச்
> சாப்பிட்டால் விந்தின் சூடு குறையும். உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.
>
> வெங்காயத் தாளை அரைத்து, அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியைக் கலந்து
> சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.
>
> வெந்தயக் கீரையுடன் குடை மிளகாய், கசகசா, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து
> கஷாயமாக்கிச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.
>
> முள்ளங்கீரை சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி
> தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து
> உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
>
> கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து
> அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும்.
>
> கொடிப்பசலைக் கீரையுடன் இரண்டு குடை மிளகாய், ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து வேக
> வைத்து கடைந்து சாப்பிட்டால், உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.
>
> குப்பைக்கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு
> அதிகரிக்கும்.
>
> கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம்
> நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும்.
>
> கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச்
> சாப்பிட்டால் (2 கிராம்) காம உணர்வு அதிகரிக்கும்.
>
> முக்குளிக் கீரையுடன், குடை மிளகாய் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவில்
> அதிக ஆர்வம் ஏற்படும்.
>
> முக்குளிக் கீரைச் சாறில் தென்னம்பாளை அரிசியை அரைத்துச் சாப்பிட்டால், நீண்ட
> நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.
>
> முக்குளிக் கீரையுடன் சிறிது லவங்கம், பட்டை ஆகியவற்றைச் சேர்த்துச்
> சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காம உணர்வு அதிகரிக்கும்.
>
> முக்குளிக் கீரை, நெருஞ்சி முள் இரண்டையும் பாலில் போட்டு அவித்து, உலர்த்திப்
> பொடியாக்கிச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
>
> காயம்
>
> அகத்திக்கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட காயங்கள் மீது தடவினால், அவை விரைவில்
> ஆறும்.
>
> காய்ச்சல்
>
> அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக்
> கொதிக்க வைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்குக்
> கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.
>
> முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக்
> கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து
> சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
>
> அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்துவிட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல்
> குணமாகும்.
>
> புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30 மிலி முதல் 50 மிலி வரை
> குடித்து வந்தால் கடுமையான காய்ச்சலும் குணமாகும்.
>
> கொத்தமல்லியோடு சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால்
> குளிர்க்காய்ச்சில் குணமாகும்.
>
> கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர்
> ஜூரம் உடனே குணமாகும்.
>
> புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான
> காய்ச்சல்களும் குணமாகும்.
>
> கால் ஆணி
>
> பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில்
> போட்டால் அவை மறையும்.
>
> கால் வீக்கம்
>
> புளிச்சக்கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம்
> குணமாகும்.
>
> பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால்
> கால் வீக்கம் குணமாகும்.
>
> குடல் கிருமிகள் ஒழிய
>
> வங்கார வள்ளைக் கீரைச் சாறில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல்
> கிருமிகள் ஒழியும்.
>
> குடல் புண்
>
> முளைக்கீரையை சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண்கள்
> குணமாகும்.
>
> வெங்காயத் தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, சிறிது மஞ்சள்
> தூள் சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
>
> வெந்தயக் கீரையுடன் சிறிது உளுந்தைத் தட்டிப்போட்டு கஷாயமாகச் செய்து
> சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
>
> உலர்ந்த பிரண்டை இலையை (100 கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு (10 கிராம்)
> ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் அளவில்
> சாப்பிட்டால் குடல் புண், தொண்டைப் புண், ஆசனப் புண் போன்ற அனைத்தும்
> குணமாகும்.
>
> அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச்
> சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
>
> நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால்
> குடல்புண்கள் ஆறும்.
>
> முள்ளிக்கீரையைச் சுத்தம் செய்து பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண்கள்
> குணமாகும்.
>
> பரட்டைக் கீரையைப் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் குடல் புண்கள்
> குணமாகும்.
>
> குடல் புழுக்கள்
>
> மணலிக் கீரை சாறில் வாய்விளங்கத்தை (2) அரைத்து இரவில் சாப்பிட்டால் குடல்
> புழுக்கள் சாகும்.
>
> குழந்தை வளர்ச்சி
>
> முளைக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்ல
> உயரமாக வளர்வார்கள்.
>
> குளிர் ஜன்னி
>
> ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10), திப்பிலி (3), மஞ்சள் நான்கு
> சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் சேர்த்து
> கலந்து சாப்பிட்டால், சளி இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு
> அற்புதமான மருந்து இது.
>
> குஷ்ட நோய்கள்
>
> வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து
> நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும்
> குணமாகும்.
>
> கைகால் எரிச்சல்
>
> பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால்
> கைகால் எரிச்சல் குணமாகும்.
>
> கொழுப்பு கரைய
>
> பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து,
> கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பு கரையும்.
>
> பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.
>
> தூதுவளைக் கீரைச் சாறை 30 மிலி அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால்,
> உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
>
> டெங்கி
>
> கொசுக்களின் மூலம் பரவும் வைரஸ்களினால் டெங்கிக் காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கி
> மோசமாகும்பொழுது உள்ளுறுப்புக்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இறப்பு
> ஏற்படுகிறது. நவீன மருத்துவத்தில் டெங்கிக்கு மருந்து கிடையாது. ஆனால்
> பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் டெங்கியை அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு
> எளிதில் குணப்படுத்துகிறார்கள்.
>
> அம்மான் பச்சரிசி வெறும் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக
> கழுவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி இலையை ஒரு நிமிடத்திற்கு
> கொதிக்க விடவும். பிறகு இந்த நீரை ஆற வைத்து வடிகட்டி குடிக்கவும். 24 மணி
> நேரத்திற்கு நோயாளி இந்த அம்மான் பச்சரிசி நீரை மட்டும் குடித்து வர வேண்டும்.
>
> சரும நோய்
>
> பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து, அக்கி மற்றும் படை, தேமல்
> போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் நிவாரணம் பெறலாம்.
>
> புளிச்சக்கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் கரப்பான்
> போன்ற தோல் நோய்கள் தீரும்.
>
> அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில்
> கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின்
> மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.
>
> கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை, சொறி,
> சிரங்கு ஓன்ற தோல் நோய்கள் குணமாகும்.
>
> முடக்கத்தான் கீரைச் சாறில் சிறிது மஞ்சள் தூள் கலந்து படை, சொறி, கரப்பான்
> போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் குணம் பெறலாம்.
>
> அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச்
> சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
>
> முசுமுசுக்கைக் கீரைச் சாறில் பரங்கிப்பட்டையை ஊற வைத்து, உலர்த்தி பாலில் வேக
> வைத்து மீண்டும் உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு
> வேளையும் ஒரு கிராம் சாப்பிட்டால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.
>
> ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை
> இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல், படை, கரும்படி போன்ற தோல்
> நோய்கள் குணமாகும்.
>
> படை, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பண்ணைக் கீரையை அரைத்துப்
> பற்றுப்போட்டால் அவை குணமாகும்.
>
> பரட்டைக் கீரையை அரைத்து சொரி, சிரங்குகள் மீது தடவினால் அவை குணமாகும்.
>
> பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப்
> பயன்படுத்தினால் படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
>
> சளி
>
> சளித்தொல்லையைப் போக்க மிளகு தேங்காய்ப்பால் துணை புரியும்.
> தேவையான பொருட்கள்: மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, கருப்பட்டித்தூள் 2
> மேஜைக்கரண்டி, தண்ணீர் ஒரு டம்ளர், கெட்டியான தேங்காய்ப்பால் அரை டம்ளர்
>
> செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், கருப்பட்டித்தூள், தண்ணீர் சேர்த்து
> அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இது பாதியாக வற்றியதும் இறக்கி தேங்காய்ப்
> பாலை விட்டுக் கலந்து பரிமாறவும். இது 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால்
> சளித்தொல்லை போய்விடும். தேங்காய்ப்பாலுக்கு சளியைப் போக்கும் தன்மை உண்டு.
> அதனுடன் மிளகும் சேர்வதால் உடம்புக்கு நல்லது. மிளகுக் காரம் வேண்டாம் என்றால்
> மிளகைப் பொடிக்காமல் நன்றாக வறுத்து கொதிக்கவிட்டு வடிகட்டி அருந்தலாம்.
>
> ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, மிளகு (3) இரண்டையும் விழுதாக அரைத்து
> காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள்
> நீங்கும்.

Monday, March 7, 2011

சோற்றுக் கற்றாழை



சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

Sunday, March 6, 2011

ரத்த அழுத்தம்

டந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
இதயம் ஒவ்வொரு முறையும் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுககும் அனுப்புகிறது. இவ்வாறு இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 (in mmHg, or millimeters of mercury) என்ற அளவில் இருப்பது இயல்பானது.

அது என்ன 120/80 (in mmHg, or millimeters of mercury) . இதன் பின்னணியில் உள்ள அர்த்தம் என்ன?

இதயம் ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமானது இரண்டு வகைப்படும். அதாவது இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும் போது வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது.

இதயம் சுருங்கும்போது அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Syvolic Pressure) என்றும், இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும், 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது.

ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்த மிகு அழுத்த நிலை (Hypertension) என்று சொல்கிறார்கள்.


பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

மருத்துவத் துறை நன்கு வளர்ச்சி பெற்றாலும் ரத்த மிகு அழுத்த நோய் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு நம்மால் முழுமையான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தம் உள்ள நோயாளிகளில் 95 சதவீதத்தினருக்கு ரத்த மிகு அழுத்த நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. காரணங்கள் கண்டறிய இயலாத ரத்த மிகு அழுத்த நோயை முதல்தர ரத்த மிகு அழுத்த நோய் என்றும்  காரணமறியா ரத்தமிகு அழுத்த நோய் (Idiopathic Hypertention) என்றும் குறிப்பிடுவார்கள்.

ரத்த மிகு அழுத்த நோய்க்கு ஆளானவர்களில் 5 சதவீதம் பேருக்கு நோய்க்கான அடிப்படைக் காரணங்களை ஓரளவு கண்டுபிடிக்க முடியும். எனவேதான் இந்த வகையான ரத்த மிகு அழுத்த நோயை இரண்டாம் நிலை ரத்த மிகு அழுத்த நோய் என்று குறிப்பிடுவார்கள். இந்த பிரச்சனையானது சிறுநீரக நோய்களின் காரணமாகவும், உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் தொடர்புடைய (ENDOCRINE DISEASES) நோய்களின் காரணமாகவும், சிலவகையான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதாலும் ஏற்படக்கூடும்.

ரத்தமிகு அழுத்த நோயில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அதன் அறிகுறிகள் அவ்வளவாக வெளியில் தெரியாது. மற்ற நோய்களைப் போல் இந்தப் பிரச்சனைக்கு சிறப்பான கண்டுபிடிக்கும் தன்மையுள்ள அறிகுறிகள் கிடையாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீண்ட நாள்கள்வரை நோயின் தன்மையை அறியாமல் சாதாரணமாக இருப்பார்கள். எனவேதான் இதை அமைதியான உயிர்க்கொல்லி நோய் (Silent Killer) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பெரும்பாலும் இந்த நோயானது ஏதாவது மருத்துவப் பிரிசோதனையின்போதோ அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும்போது நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் போதோதான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.

இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி, படபடப்பு, நெற்றிப்பொட்டு, எலும்புப் பகுதியில் உள்ள தமனகள் துடித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். ஆனால் இந்த அறிகுறிகளைக் கொண்டு ரத்தமிகு அழுத்த நிலையை உறுதிசெய்ய முடியாது.

சரி, இந்த நோய் இருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்வது?

ரத்த மிகு அழுத்த நிலையைக் கண்டுபிடிக்க மிகச்சிறந்த முறை, ரத்த அழுத்தக் கணக்கீடு கருவியைப் பயன்படுத்தி நேரிடையாக ரத்தத்தின் அழுத்தத்தை அளவிடுவதுதான். இது மிகவும் எளிமையான, சிறந்த,நம்பகமான முறையாகும்.
இந்த முறையால் ரத்தமிகு அழுத்த நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தக்க மருத்துவச் சிகிச்சைகளின் மூலமாகக் கட்டுப்படுத்தாவிட்டால் இதயத்தில் மட்டுமின்றி உடலில் உள்ள முக்கியதான உறுப்புகளிலும் பலவகையான சிக்கல்கள் உருவாகக்கூடும்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை...?
உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

ரத்தமிகு அழுத்தத்தின் காரணமாக இதயத் தமனிகள் தடித்துச் சுருங்குவதால் இதய வலி ஏற்படும். மேலும் இதயத் தசைகள் தங்களுடைய இயற்கையான வலுவை இழப்பதால் உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் செலுத்த முடியாத நிலையில் இதயச் செயலின்மை நிலை (Heartˆ Failure) ஏற்படுகிறது.

மேலும் தக்க மருத்துவ முறைகளின் மூலமாக உரிய நேரத்தில் ரத்தமிகு அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. 

இன்னொரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ரத்த மிகு அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
தக்க மருந்துகளைச் சாப்பிடுதல், உப்பைக் குறைத்துக் கொள்ளுதல், தக்க உடற்பயிற்சிகளைச் செய்தல், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தினசரி உணவில் கட்டுப்படுத்துதல், அடிக்கடி ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்தல் ஆகிய முயற்சிகளின் மூலமாக ரத்த மிகுஅழுத்த நோய் உடலில் எந்த வகையான சிக்கல்களையும் ஏற்படுத்தாதவாறு, நோயின் தன்மையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுள் முழுவதும் மேற்கூறிய ஆலோசனைகளைக் கடைப்பித்து இந்த நோயை நன்கு கட்டுபபாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ரத்தமிகு அழுத்த நோய்க்கு ஆளான நோயாளிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை செய்யக்கூடாதவை , செய்ய வேண்டியவை என இருவகைகளாகப் பிரிக்கலாம்.


ரத்த மிகுஅழுத்த நோயாளிகள் செய்யக்கூடாதவை

    மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை மருந்துகளை நீங்களாகவே திடீரென நிறுத்துதல்.
    அப்பளம், சிப்ஸ் வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்திய உணவு வகைகளை அதிக அளவு சாப்பிடுதல்.
    அளவுக்கு அதிகமாகப் புகைப்பிடித்தல்,
    கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களான இறைச்சி, முட்டை, எண்ணெய், நெய், வனஸ்பதி போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல்.
    அளவுக்கு அதிகமாக மன உளைச்சல் அல்லது மன இறுக்கத்துக்கு ஆளாதல்.

ரத்த மிகு அழுத்த நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

    * மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தவறாமல் வேளா வேளைக்குச் சாப்பிட வேண்டும்.
    * அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பில் அளவை வெகுவாகக் குறைத்துவிடுங்கள்.
    * உங்கள் உடலின் எடை அதிகமாக இருந்தால் உடலின் எடையைக் குறையுங்கள். உணவில் கட்டுப்பாட்டாக இருங்கள்.
    * உங்கள் ரத்தத்தில் உள்ள கொரஸ்ட்ராலின் அளவானது ஆரோக்கியமான அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் அதைக் குறையுங்கள்.
    * உங்கள் உடலின் ஆற்றல், வயது ஆகியவற்றுக்கு ஏற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள்.
    * ஏற்கெனவே நீங்கள் நீரழிவு நோய்க்கு  ஆளாகியிருந்தால் தக்க மருத்துவ முறைகள் உணவுக் வட்டுப்பாட்டின் மூலமாக நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
    * அன்றாட உணவில் பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கலந்த உணவு வகைகளைப் போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
    * ரத்த மிகு அழுத்த நோய்க்காக மருந்துகள், மாத்திரைகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும்போது அவற்றின் அளவு, செயல்திறன் போன்ற விவரங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

Monday, February 21, 2011

புகை



  தொடர்ந்து புகை பிடிப்பவர் என்றாலோ, அல்லது புகை பிடிப்பவருடன் வசித்தாலோ தொடர்ந்து ஒரு இருமல் இருக்கும். இதற்கு Smoker’s bronchitis என்று பெயர்.
ஒவ்வாமை: ஒவ்வாமையினால் இருமல் வருமானால் தொண்டையில் பின்னால் ஏதோ திரவம் சுரப்பது போல இருக்கும். தூசி, சில வேதிப்பொருட்களின் திரவ துகள், செல்ல பிராணிகளின் உடலில் சுரக்கும் திரவம் அல்லது அவர்களின் fur, பாசி , சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் இவையும் இருமலை தோற்றுவிக்கும்.


வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும்


 

வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.
உடல் சூடு, மலச்சிக்கலை போக்க
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

சுவையும், சுகமும்



ஆப்பிள் :-
இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.

விளாம்பழம் :-
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

வாழைப்பழம் :-
ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது.

திராட்சை :- 
உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மாம்பழம் :-
கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

ஆரஞ்சு : -
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழம் :-
பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

அன்னாசி :- 
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Sunday, February 20, 2011

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்




பெப்ரவரி 17, 2011vayalமறுமொழியவும்
தட்பவெப்பம்,உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கிறார்
அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் ஜெயந்தி ஈசன்.

பாதுகாப்பு முறைகள்:
* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.
* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.
* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.
* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.
* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.
* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.
*பிரச்னை உள்ளவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா: அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. இதன் மூலம் ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும். மேலும் சில சிப்ஸ் வகைகள் சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றையும் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், தானியங்கள், முழு கோதுமை உள்ளிட்டவைகளுக்கும் தடா போடவும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
*அக்ராகாரம் வேர், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
?*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 100 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.
*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடிக்கலாம்.
*வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.
*இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் அலர்ஜியால் உண்டாகும் வாந்தி நிற்கும்.
*சாப்பிட்ட உணவு அலர்ஜியானால் கொத்தமல்லி இலைச் சாற்றுடன் உப்பு கலந்து குடித்தால் நஞ்சு வெளியேறி விடும்.
*உருத்திர சடை இலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு குணமாகும்.
*எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும். அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.