Monday, February 21, 2011

புகை



  தொடர்ந்து புகை பிடிப்பவர் என்றாலோ, அல்லது புகை பிடிப்பவருடன் வசித்தாலோ தொடர்ந்து ஒரு இருமல் இருக்கும். இதற்கு Smoker’s bronchitis என்று பெயர்.
ஒவ்வாமை: ஒவ்வாமையினால் இருமல் வருமானால் தொண்டையில் பின்னால் ஏதோ திரவம் சுரப்பது போல இருக்கும். தூசி, சில வேதிப்பொருட்களின் திரவ துகள், செல்ல பிராணிகளின் உடலில் சுரக்கும் திரவம் அல்லது அவர்களின் fur, பாசி , சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் இவையும் இருமலை தோற்றுவிக்கும்.


வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும்


 

வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.
உடல் சூடு, மலச்சிக்கலை போக்க
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

சுவையும், சுகமும்



ஆப்பிள் :-
இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.

விளாம்பழம் :-
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

வாழைப்பழம் :-
ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது.

திராட்சை :- 
உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மாம்பழம் :-
கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

ஆரஞ்சு : -
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழம் :-
பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

அன்னாசி :- 
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Sunday, February 20, 2011

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்




பெப்ரவரி 17, 2011vayalமறுமொழியவும்
தட்பவெப்பம்,உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கிறார்
அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் ஜெயந்தி ஈசன்.

பாதுகாப்பு முறைகள்:
* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.
* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.
* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.
* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.
* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.
* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.
*பிரச்னை உள்ளவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா: அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. இதன் மூலம் ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும். மேலும் சில சிப்ஸ் வகைகள் சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றையும் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், தானியங்கள், முழு கோதுமை உள்ளிட்டவைகளுக்கும் தடா போடவும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
*அக்ராகாரம் வேர், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
?*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 100 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.
*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடிக்கலாம்.
*வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.
*இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் அலர்ஜியால் உண்டாகும் வாந்தி நிற்கும்.
*சாப்பிட்ட உணவு அலர்ஜியானால் கொத்தமல்லி இலைச் சாற்றுடன் உப்பு கலந்து குடித்தால் நஞ்சு வெளியேறி விடும்.
*உருத்திர சடை இலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு குணமாகும்.
*எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும். அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.

Thursday, February 17, 2011

கொலஸ்ட்ரால்



Join Only-for-tamil

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)


கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm% 
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm % 
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.


எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.


கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .



உயிர்


உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனைஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.

உடல் ஆரோக்கியத்துக்கு


நமக்கு வயதாகும் போது, தினமும் நாளிதழ்களை படிக்க துவங்கி விடுவோம். எதற்காக? ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெற. நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் ஆரோக்கியக் குறிப்புகளை படிக்கத் துவங்கி விடுவோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ உண்மையிலேயே நாம் என்ன செய்ய வேண்டும்?
முக்கியமான 10 வழிகளை பின்பற்ற வேண்டும். அவை:
1. உடல் எடை
நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். எந்த வயதிலும், உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண் தான் இது. உதாரணமாக, 80 கிலோ / 2  மீட்டர் x  2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். உடல் நிறை குறியீட்டெண் அளவு 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும். அதே சமயம், உடல் எடையை பராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, “மாடல்’ அழகியாக விரும்புவது, உண்மையில் ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏற்படும். சரிவிகித உணவு உண்ணாமல் போவது, உணவு குறித்த அர்த்தமற்ற பிரமை ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும்.
உணவு முறையில் மாற்றம் செய்து சாப்பிடத் துவங்கினால்,  உடல் எடை கூடி விடும். இதற்கு பின்னணியாக இருக்கும் நோயை கண்டறிந்து, அதை சரி செய்த பின்னரே, உடல் எடை மீது கவனத்தில் கொள்ள முடியும். தைராய்டு பிரச்னை, நீரிழிவு நோய், அதிக உணவு சாப்பிடும் போக்கு, உணவில் உள்ள சத்துக்கள் சரி விகிதத்தில் உறிஞ்சப்படாமை,  புற்றுநோய் அல்லது வேறு நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்த பிறகு, உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும். அப்போது தான் உடல் எடை சீராகும். உடலுக்கு தேவையான கலோரி அளவு கொண்ட உணவு சாப்பிட்டால், உடல் எடை எப்போதும் சீராகவே இருக்கும். தினசரி கலோரி அளவு, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 20 கலோரி என்ற கணக்கில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். உடல் எடை சீராக இருக்க, ஒரு கிலோவுக்கு 30 கலோரி அளவு என்ற கணக்கும், உடல் எடை அதிகரிக்க, ஒரு கிலோவுக்கு 40 கலோரி அளவு உணவும் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு மாறுபடலாம்.
2. இதய நோய்
இப்போதெல்லாம், 30 வயதிலேயே இதய நோய் தாக்க துவங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் வரை, இந்த நோயிலிருந்து தப்பித்து விடுவர். அதன் பின், ஆண்களை போலவே நோய் உண்டாகி விடுகிறது.
புகை பிடிக்காமல், புகை பிடிப்பவர்களின் அருகில் நிற்காமல் இருந்தால், இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டால், படபடப்பு குறையும்.
3. சரிவிகித உணவு
சரிவிகித உணவு என்பது, அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்சத்து அடங்கிய உணவுகள், அசைவமாக இருந்தால், மீன் ஆகியவை சாப்பிடுவது தான். பூரிதக் கொழுப்பு, அதிக உப்பு ஆகியவை அடங்கிய ரெடிமேடு உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றில் அளவுக்கு அதிகமாக கலோரிகள் இருக்கும்.
4. உடற்பயிற்சி
ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சியோ, நடை பயிற்சியோ, நீச்சலோ மேற்கொள்ளலாம். தினமும் 20 நிமிட தியானம், யோகா ஆகியவை மேற்கொள்ளலாம்.
5. புற்றுநோய் தவிர்ப்பு
புற்றுநோயை தவிர்ப்பது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது ஆகியவை, வாழ்நாளை அதிகரிக்கும். சரியான உடல் எடை, சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, புகை பிடிக்காமை, ஓரளவு மட்டுமே மது அருந்துதல் ஆகியவை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஹெப்பாடைட்டிஸ் பி வைரசுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், கல்லீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பப் பை வாய் புற்றுநோயைத் தடுக்க, எச்.பி.வி., தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம். “பாப் ஸ்மியர்’ பரிசோதனை, மார்பக சுய பரிசோதனை, மேமோகிராபி ஆகியவை, மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும்.
கோலோனோஸ்கோபி மற்றும் “ப்ராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென்’ ஆகியவை, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள்.
6. காயங்களை தவிர்த்தல்
இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் உயிரிழப்புகள், விபத்தால் ஏற்படுகின்றன. 12 லட்சம் பேர், படுகாயம் அடைகின்றனர்; மூன்று லட்சம் பேருக்கு, விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவரும், ஹெல்மெட் அணிந்தால், விபத்து ஏற்படும் போது, காயமின்றி தப்பிக்கலாம். ஒரு வாகனத்தில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிச் செல்லவே கூடாது. கார் பயணத்தின் போது, “சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம். சிலர், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மட்டும், “சீட் பெல்ட்’ அணிகின்றனர்; இது தவறு. குறைந்த தூரத்தில் செல்லும் போது கூட, “சீட் பெல்ட்’ அணிய வேண்டும். வீடுகளில், வழுக்கு தரை, படிகள், குளியலறைகள் ஆகியவற்றில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தி, கைப்பிடிகளும் வைத்தால், இந்த நிலையை தவிர்க்கலாம். கழிவறைகளில் போதுமான அளவு கைப்பிடிகள் வைத்தால், முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
7. முழு உடல் பரிசோதனை
உயரம், எடை, ரத்த பரிசோதனை, இருதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை குறித்து, ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண், பல் ஆகியவற்றுக்கும் ஆண்டுதோறும் பரிசோதனை தேவை. பரிசோதனைக் கூடங்கள் நடத்தும் மருத்துவ முகாமில், அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தேவையில்லை. வேண்டாத பரிசோதனைகளை செய்வது, அதிகச் செலவை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை குறித்த பரிசோதனை, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
8. தீவிர நோய்
நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர பாதிப்பு கொண்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டையும், மருந்து உட்கொள்வதையும், மிகச்சரியாக பின்பற்ற வேண்டும். டாக்டர்கள் குறித்து கொடுத்த நாட்களில், நேரில் சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முறையாக கையாளும் நோயாளிகள், பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. நோய் தடுப்பு மருந்துகள்
செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில், குளிர்க்காய்ச்சலைத் தவிர்க்கும் ஊசிகளை, முதியோர் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த ஆண்டுகளில் ஏற்படும் குளிர் காய்ச்சலை தடுக்க இந்த மருந்து உதவும். வேகமாகப் பரவும் நோய்கள் ஏதும் இருந்தால், அதற்கான தடுப்பு ஊசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும். 65 வயது நிரம்பியவர்கள், “நியூமோகாக்கல்’ தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு முறை போடப்பட வேண்டிய ஊசி இது.
10. ஊட்டச்சத்து மாத்திரைகள்
முதியோருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 1,200 மி.லி., கிராம் அளவுக்கு கால்சியம் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும். டானிக்குகளோ, புரோட்டீன் சப்ளிமென்ட்டுகளோ தேவையில்லை.

Categories:

உடல் உறுப்புக்கள்

சர்க்கரை நோய் (டையாபடீஸ்)



ஆரோக்கியமான ஒரு நபரில் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும்சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது
உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள்.  இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் - கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
செல்கள் குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றுகிறது -  குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.
சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களாவன.
குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.
உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
 ஏனெனில்
  1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
  2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை  திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
  3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது - எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை

சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவ நேரத்திலும்)
  2. தோலில் அறிப்பு ஏற்படுதல்.
  3. பார்வை மங்கலடைதல்.
  4. சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
  5. பாதம் மரத்துப்போதல்
  6. அதிகமான தாகம்.
  7. காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
  8. எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
  9. எடைகுறைதல்.
  10. தோல் வியாதிகள் ஏற்படுதல்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்திறுத்தல் விஷமாகும்.
  • அப்படி நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்பகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.
  • கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.
  • சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரகநோய் ஏற்படும்.
  • ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சர்க்கரை நோயினைக் கையாளுதல்

சர்க்கரை நோயின்போது தோலினை பராமரிக்கும் முறை
சர்க்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால்,  உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு  ஏற்படுகிறது.
உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.
  • தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.
  • தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.
  • பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்
  • ஆறாத காயங்கள்


சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்
  • தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது
  • வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்க்கவும்
  • குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு துடைத்தல்.
  • வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்
  • சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


காயங்களை பராமரித்தல்
சர்க்கரை நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களையும் சரியாக பராமரிப்பது அவசியம்.
  • சுத்தமான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிப்பட்டவுடன் காயங்களைக் கழுவவும்
  • ஆல்காஹால்/ஐயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளைப் பயன்படுத்தவும்
  • சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்


பாதங்களைப் பராமரித்தல்
சர்க்கரை நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்
  • புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பாருங்கள்.
  • கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
  • நகங்களை அவ்வப்போது வெட்டவும்
முடிந்த வரை காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாக்கவும்

பற்களைப் பராமரித்தல்
முறையான பராமரிப்பின் மூலம் பற்களை நீண்ட நாட்கள் வலிமையோடு வைத்துக்கொள்ளலாம்.


பல் துலக்குதல் :
  • மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.
  • ஒரு நாளுக்கு, இரண்டு முறை பல் துலக்கவும்.
  • பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும்  பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
  • நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.
  • பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கீழ்க்காண்பவற்றை கண்டறிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.
  • சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.
  • பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.
  • பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .
  • பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.
  • பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.
  • துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.
கண்களைப் பராமரிப்பதுசர்க்கரை நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு. நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம். உண்மையில், இந்த ரெடினோபதிசர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரைநோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். கீழ்க்காண்பவைகளை கண்டறிந்தால் கண் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
  • புள்ளிகள், அலசலான பார்வை, சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.
  • நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாமல் பிரச்சினை போன்றவை.
.