இந்திய மருத்துவம்:
மேற்குலகம் உலகின் முதல் மருத்துவராக ஹிப்போக்கிரட்டஸைக் (460 - 377 BC) குறிப்பிடுகிறது. ஆனால் இவருக்கு முன்பே மகரிஷி சாரகா (500 BC) எழுதிய சாரகா சம்ஹிதா அல்லது எளிய தமிழில் மருத்துவக் கையேடு புகழ்பெற்றது. நூலில் பல்வேறு வியாதிகளுக்கான தீர்வுகள் காணப்பட்டது. மருத்துவ முறைகள், முதலுதவிகள் குறித்த தெளிவான கையேடு. நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மருத்துவர் சாரகா ரோம, அரபு நாடுகளில் மிகவும் மதிக்கப்பட்டார்.
அடுத்தது ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம்! கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்பே சுஷ்ருதர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! சிதைந்த மூக்கு, உதடு,காதுகள் இவற்றைத் தனது அறுவைசிகிச்சைத் திறனால் சரிசெய்திருக்கிறார். அறுவை சிகிச்சையை 8 வகைகளாகப் பிரிக்கிறார். 125 வகையான மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.
No comments:
Post a Comment