Thursday, February 2, 2012

கர்ப்ப காலத்தில்


கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.சத்தாக உணவுகளை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.டாக்டர்கள் கர்ப்பகாலத்தில் நல்ல சத்தான உணவை உட்கொள்ள அறிவுருத்துகின்றனர்.
அதன்மூலம் தாயின் எடை அதிகரிக்க வேண்டும்.அதற்காக மிகஅதிகமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதில்லை.பொதுவாக சாதாரண எடையுள்ள ஒரு பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும்.அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிகமுக்கியம்.கர்பம் அடைந்த பெண்களுக்கு 100 முதல் 300 கலோரிகள் தேவைப்படும்
குறைவான உடல் எடை கொண்ட பெண்கள்  தன்னுடைய கர்ப்பகாலத்தில் 13 முதல் 18 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.அதிக உடல் எடையுள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் 7 முதல் 11 கி.கி வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னுடைய எடையை குறைத்து கொள்வது மிக தவறான ஒன்று ஏனேனில் வயிற்றில் உள்ள குழந்தையை அது பாதிக்க நேரிடும் ஓவ்வொரு மாதமும் 1கிலோவுக்கு குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.குழந்தை வயிற்றில் இருக்கும் போது போதியளவு உணவு உட்கொள்ளவேண்டும்.அதிக அளவிலான உணவு எடுத்துகொண்டால் குழந்தை பருத்து ஆபரேஷன் செய்ய நேரிடும்.போதிய அளவு உணவை எடுத்துகொண்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டும்
அதிக உடல் எடை ஆபத்தானது என்று நீங்களே முடிவு செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்.அதிக எடை காணப்பட்டால் நடைபயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிக உப்பு சேர்த்து சாப்பிடகூடாது.உப்பின் அளவில் கட்டுபாடு வேண்டும்.அதிக அளவிலான உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கவேண்டும்
கர்ப்பகாலத்தில் உடல் எடை எவ்வாறு மாறுபடுகிறது என்றால் குழந்தை 3.5 கி.கி, நஞ்சுக்கொடி1 கி.கி, முதல்1.5 கி.கி வரை மார்பகத்திசுக்கள் 1 முதல் 1.5 வரை இரத்த ஒட்டம் 2 கி.கி பிரசவத்திற்கான காலகட்டத்தில் கொழுப்பு 2.5 முதல் 4 கி.கி வரை தாய்பால் கொடுத்தல் கர்ப்பபை விரிவு 1 முதல் 2 கி.கி வரை.
கர்பகாலத்தில் பெண்கள் உணவுமுறை உடற்பயிற்சி என டாக்டர்கள் அறிவுரைப்படி கேட்டு நடந்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment